சீர்காழி, ஜூன் 14- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமார் (28), குப்பன் மகன் ஆறுமுகம் (70) ஆகி யோர்களின் குடிசை வீடுகள் அருகருகே உள்ளன. இருவரும் மூங்கில் கூடை பின்னும் தொழிலாளிகள். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் களின் குடிசை வீடுகளுக்கு மேல் சென்று கொண்டிருந்த மின்கம்பிகள் காற்றில் ஒன்றோடொன்று உரசியதில், வெளியான தீப்பொறி கூரையின் மீது விழுந்து இரண்டு குடிசைகளும் எரிந்து நாசமாகியது. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவா மல் அணைத்தனர். இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீர்காழி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர் செல்வம், ஒன்றியக் குழு தலைவர் ஜெயப்பிர காஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவபாலன் ஆகியோர் நேரில் சென்று நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.