tamilnadu

img

வனத்துறையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சீர்காழி, ஜன.19- நாகை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி ஊராட்சி வெள்ளமணல் திட்டு, காப்பக் காடு ஆகிய கிராமங்களில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 40 ஏக்கர் நிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக தோட்டப் பயிர்கள் உள்ளிட்ட பல வகையான பயிர் களை அப்பகுதியை சேர்ந்தவர் கள் சாகுபடி செய்து வருகின்ற னர்.  இதில் கடந்த சில வருடங்க ளாக ஒவ்வொரு ஆண்டும் வனத் துறை ஊழியர்கள் வெள்ளமணல் கிராமத்திற்கு வந்து வனத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத் தில் பயிர் சாகுபடி செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் மற்றும் விவசாயி கள் இடையே பேச்சுவார்த்தை யும் நடந்து வருகிறது.  இதற்கிடையே உளுந்து பயறு விதைப்பு செய்வதற்கு நில த்தை விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்த னர். அப்போது அங்கு வந்த வனக் காவலர்கள் உழவு பணியை தடுத்து நிறுத்தினர். பின்னர் தஞ்சை மண்டல வனப் பாதுகாப்பு அலு வலர் ராமசுப்ரமணியன், மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்த ரவின் பேரில் சீர்காழி வனசரக அலுவலர் அய்யூப்கான்  நாதல் படுகை கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் கிருஷ்ண மூர்த்தி மகன் கவியரசன் (17) என்ப வரை கைது செய்து டிராக்டரை யும் பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;