tamilnadu

img

டெங்கு விழிப்புணர்வு  மருத்துவ முகாம்

தரங்கம்பாடி அக். 21- நாகை மாவட்டம், பொறையார் அருகேயுள்ள தில்லையாடி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.  மாவட்ட கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) எம்.எஸ்.பிரசாத் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார். மருத்துவர்கள் கார்த்திக் சந்திரக்குமார், பாலன் ஆகியோர் தலைமையிலான நடமாடும் மருத்துவக் குழுவினர் 65 க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து மருந்துகளை வழங்கினர்.  பின்னர் ஒவ்வொரு வீடாக சென்ற விழிப்புணர்வு குழுவினர் டயர், பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்க விடக் கூடாது உள்ளிட்ட அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி அகற்றினர்.  மேலும் வீடுகள், தெருக்கள் என கிராமம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. வட்டாட்சியர் சித்ரா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், உதவி பொறியாளர் சோமசுந்தரம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஊராட்சி செயலர் உமாசெல்வி ஆகியோர் உடனிருந்தனர்.