tamilnadu

img

ஊதியம் வழங்கக் கோரி பி.எஸ்.என்.எல். தொழிலாளர் போராட்டம்

நாகப்பட்டினம், மே 16- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஆயி ரக்கணக்கான நிரந்தர ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், ஒப்பந்த ஊழியர்களுள் பலரையும் பணி நீக்கம் செய்து, அவுட்சோர்சிங்’ முறையில் புதிய நபர்களைப் பணியில் அமர்த்து வதை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்க ளுக்கு 10 முதல் 15 மாதங்கள் வரை ஊதி யம் வழங்காமல் உள்ளதை கண்டித்தும்  நாகை அலுவலக வளாகத்தில், பி.எஸ். என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர் சங் கத்தினர் பல்வேறு கட்டப் போராட்டங்க ளை மேற்கொண்டுள்ளனர்.  இதில் மே-1 அன்று கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மே-15 கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டு  தர்ணா நடத்தினர். மேலும் மே-18 கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம், மே-20 பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.