நாகப்பட்டினம், ஆக.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றி, இயக்க வள ர்ச்சிக்கு அயராது பாடு பட்ட தோழர் ஆர்.முத்துப்பெ ருமாள் மறைந்த முதலா மாண்டு நினைவு தின நிக ழ்வும், அவரது நினைவாக மரக் கன்றுகள் நடுதலும் நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், சோழவித்தியா புரத்திலுள்ள அவரது இல்ல வளாகத்தில் வெள்ளி க்கிழமை நடைபெற்றது. சிபிஎம் கீழையூர் ஒன்றி யச் செயலாளர் எம்.முருகையன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறு ப்பினர் வி.மாரிமுத்து செங்கொடியை ஏற்றி வை த்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகை மாலி தோழர் ஆர்.முத்துப்பெ ருமாள் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லத் தலைவர் வி.சுப்பிரம ணியன் மாலை அணி வித்தார். தோழர் ஆர்.முத்து ப்பெருமாள் முதலா மாண்டு நினைவாக இயக்கத் தலைவர்கள் மரக்கன்று களை நட்டார்கள்.