tamilnadu

img

கோவை தொழில்நுட்ப கண்காட்சி மாநாட்டில் ஏவிசி மாணவர்களுக்கு பரிசு

மயிலாடுதுறை, மார்ச் 11- மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மின்னணு மற்றும் இயற்பியல் துறை மாண வர்கள் கோவையில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சி  மாநாட்டில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகமும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் மின்னணு மற்றும் இயற்பியல் துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள்” குறித்த தேசிய மாநாடு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி கடந்த பிப்.28, 29 நாட்களில் நடை பெற்றது. இதில் ஏவிசி மின்னணு மற்றும் இயற்பியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் எம்.தினேஸ்வ ரன், ஆர்.அருண்குமார் ஆகியோர் மின்னணு திட்ட  கண்காட்சியில் மூன்றாம் இடத்தையும், ஏ.ஆர்த்தி, எஸ்.ஆர்த்தி ஆகியோர் சுற்று பிழைத்திருத்தத்தில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ள னர்.  பரிசுகள் பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் என்.விஜயரெங்கன், செயலர் கி.கார்த்திகே யன், கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆர்.நாகராஜன், மின்னணு மற்றும் இயற்பி யல் துறைத்தலைவர் கே.கிருஷ்ணவேணி, பேராசிரி யர்கள், பணியாளர்கள், சகமாணவர்கள் பாராட்டினர்.

;