tamilnadu

ஒரு மாதமாகியும் வராத காவிரி நீர் நாகை கடைமடைப் பகுதிக்கு 200 கிராம விவசாயிகள் பாதிப்பு

சீர்காழி, செப்.23- கொள்ளிடம் கடைமடைப் பகுதியில் உள்ள கிளை பாசன கிளை வாய்க்கால்களில் இது வரை தண்ணீர் சென்று சேராததால் விவசாயி கள் வேதனையடைந்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதி கடை மடைப் பகுதியாகும். தொடர்ந்து பிரதான வாய்க்கால்களில் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட்டால் தான், பாசன கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும் கடந்த வருடங்களில், போதிய தண்ணீர் பாசனத்திற்கு கிடைக்காததால், கொள்ளிடம் கடைமடைப் பகுதி அதிக வறட்சியை சந்தித்தது. கடந்த வருடம் ஜூன் மாதம் மேட்டூர் அணை யிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் எந்த பயனுமின்றி கடலில் சென்று கலந்தது. இத னால் கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு பாச னத்திற்கு போதிய தண்ணீர் சென்று சேராத தால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்க ளில் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சாகு படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த வருடத்தில் மேட்டூரில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியதால் வெளியேற்றப்பட்ட நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று கடலில் கலந்து வீணாகியது. பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் பகுதியில் உள்ள தெற்குராஜன்  பாசன வாய்க்கால், புதுமண்ணியாறு மற்றும் பொறை வாய்க்கால் ஆகிய பிரதான பாசன வாய்க்கால்களில் காலம் தாழ்த்தி சென்றது. மராமத்து பணியைக் காரணம் காட்டி வாய்க்கால்களில் காலம் கடந்தே அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். அதனால் கொள்ளிடம் கடைமடைப் பகுதியில் பாசன கிளை வாய்க்கால்களில் இது வரை தண்ணீர் வந்து சேரவில்லை. விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில் உழவு செய்வதற்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர். வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேராத தால் தூர் வாரிய வாய்க்கால்களிலும் மீண்டும் புதர்மண்டி கிளை வாய்க்கால்களை அடைத்துக் கொண்டுள்ளன. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளைச் சேர்ந்த 200 கிராமங்களில் உள்ள சுமார் 250 பாசன கிளை வாய்க்கால்களில் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.  இது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீர ரும் பாசனதாரர்கள் சங்கத் தலைவருமான ஜெயராமன் கூறுகையில், மேட்டூர் அணை யிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு மாத காலமாகியும் கொள்ளி டம் கடைமடைப் பகுதிக்கு இதுவரை போதிய தண்ணீர் வந்து சேரவில்லை.  இதே போல் கடந்த ஐந்து ஆண்டு காலமாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வந்து சேரவில்லை. தண்ணீர் ஏன் வந்து சேர வில்லை என்பதனை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு அனை த்து பாசன கிளை வாய்க்கால்களையும் தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.