tamilnadu

குடும்பத்தினரோடு ஒரு பொழுதை ஏற்படுத்திய சுய ஊரடங்கு

நாகப்பட்டினம், மார்ச் 23-  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச்-22, காலை 7 மணியிலிருந்து மறுநாள் காலை 5 மணி வரை மக்கள் சுயஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.  இந்த ஊரடங்கு நாளில் மக்கள் அனைவரும் அவரவர் வீடு களிலேயே குடும்பத்தினரோடு நாளைக் கழித்தது அரிதான ஒரு நிகழ்வு, ஆனால், இப்படிக் கட்டுப்பாடாக நடைபெற்ற ஊரடங்கு, மாலை 5.30 மணிக்கு மேல் சிறிது சிறிதாகத் தளர்ச்சி யுற்றதைக் காண முடிந்தது. அதுவும், தமிழக அரசு, மறுநாள் விடியற்காலை 5 மணி வரை ஊரடங்கு என அறிவித்ததற்கு மக்களிடையே அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில், இரவு 9 மணிக்குக் கடைகள், சிறு உணவு விடுதிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்கள், பயணிகளுக்குச் சிறிது ஏமாற்றமாகவே இருந்தது.

;