tamilnadu

img

பெரியகுளத்தில் முழு ஊரடங்கு....

தேனி:
தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ,வருவாய் அலுவலர் , சிறைக் கைதி உள்ளிட்ட 66 பேருக்கு திங்கள் கிழமை  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு மாலை நிலவரப்படி தேனி, பொம்மைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை துப்புரவு தொழிலாளிகளான முறையே 55 மற்றும் 60 வயதுடைய கணவன், மனைவி, தேனியைச் சேர்ந்த 35 வயதுடைய உளவுத் துறை காவலர், பழனிசெட்டிபட்டி அரசு நகரைச் சேர்ந்த 42 வயதுடைய மதுரை சிபிசிஐடி பிரிவு தலைமைக் காவலர், சென்னையிலிருந்து பூதிப்புரத்திற்கு வந்த 3 சிறுமிகள் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பெரியகுளம், வடகரையைச் சேர்ந்த சென்னையிலிருந்து வந்த 34 வயதுடைய பெண், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண்,  தென்கரை மூன்றாந்தல் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவன், இடுக்கடிலாட் தெருவைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்பம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த  40 வயதுடைய பெண், தாத்தப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக தொழில்நுட்புனர்,  அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 57 வயதுடைய மருந்துக் கடை உரிமையாளர், சென்னையிலிருந்து வந்த பாரதியார் நகரைச் சேர்ந்த முறையே 36 மற்றும் 30 வயதுடைய கணவன், மனைவி என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போடி, வரதராஜன் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  33 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள்,  பேட்டைத் தெருவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர், குலசேகரபாண்டியன் தெருவைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்,  குச்சனூரைச் சேர்ந்த 40 வயதுடைய பண்ணைப்புரம் வருவாய் ஆய்வாளர், சின்னமனூர் பழனியாண்டி தெருவைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர், உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேனி, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 41 வயதுடைய கைதி என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.மொத்தம் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது .திங்கள்கிழமை காலை நிலவரப்படி 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி நகராட்சி குடியிருப்பை சேர்ந்த 31 வயது நபர் ,பெரியகுளம் வடகரை பள்ளிவாசல் தெருவை 65 வயது நபர் ,கெங்குவார்பட்டியைச் சேர்ந்த 21வயது வாலிபர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தேனி அருகே வயல்பட்டியைச் சேர்ந்த 28வயது நபர்  , தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 70 வயது நபர், வத்தலக்குண்டு பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த 39வயது நபர், பெரியகுளம் வடகரை, பெந்தகோஸ்த்தே தெருவைச் சேர்ந்த 25 வயது நபர், வடுகப்பட்டியைச் சேர்ந்த 37வயது நபர், சோத்துப்பாறை சத்தியாநகரைச் சார்ந்த 53 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

பெரியகுளம் காவலர் குடியிருப்பில் உள்ள தேவதானப்பட்டி தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, வடகரை 53வயது நபர், தென்கரை 28வயது நபர், அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த 37வயது நபர், பெருமாள்புரத்தைச் சேர்ந்த 55வயது நபர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி கூர்மையா கோவில் தெருவைச் சேர்ந்த 31வயது நபர், 28வயது நபர், 32 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் வடகரை மேதுகாரன் தெருவைச் சேர்ந்த 76வயது மூதாட்டிக்கும், அனுமார்கோவில் தெருவைச் சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகரை சித்திஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த 50 வயது நபர், பூச்செண்டு தெருவைச் சேர்ந்த 15வயது பெண் குழந்தை , அதே தெருவைச் சேர்ந்த 26வயது ஆண் நபர் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல வடகரை, சுப்பிரமணி சாவடி தெருவைச் சேர்ந்த 29 வயது நபருக்கும் அவரது ஆறுமாத குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கரை கம்பம் ரோட்டில் 20 வயது வாலிபருக்கும் புது தெருவைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கும், முத்துராஜா தெருவைச் சேர்ந்த 29 வயது வாலிபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த 5வயது மற்றும் 3 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் இடுக்கடி தெருவைச் சேர்ந்த 54 வயது, 47 வயது, 46 வயது நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி, பழனிச்செட்டிப்பட்டி கம்பம் ரோட்டைச் சேர்ந்த 40 வயது நபருக்கும், அவரது 38 வயது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்னைக்காடு அருகே அலடுப்பட்டியைச் சேர்ந்த 35 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செக்கானூரனியைச் சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேண்டின் நடத்தி வரும் 53 வயது நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சின்னமனூரைச் சேர்ந்த 46வயது நபருக்கும், கம்பத்தைச் சேர்ந்த உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 51 வயது மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சின்னமனூரைச் சேர்ந்த 62வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை தனியார் மருத்துவமனை, பெரியகுளம், போடி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் திங்கள் மாலை நிலவரப்படி மொத்தம் 66 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.

பெரியகுளத்தில் முழு ஊரடங்கு
பெரியகுளத்தில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருவதால் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசுப்பேருந்துகள் பெரியகுளம் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் வழியாக செல்லும் வாகனங்கள் வைகை அணை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

;