தேனி, மே 16- இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணைக்கு செல்ல தமிழக பொறியாளர் செல்ல கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தமி ழகத்தில் இருந்து யாரும் கேரளாவுக்கு வரக்கூடாது என அம்மாநில அரசு தடை விதித்திருந்தது. அணையின் பராமரிப்பு, நீர்மட்ட அளவு, நீர்வரத்து, நீர்வெளியேற் றம், கசிவு, மதகுகள் இயக்கம் போன்ற பணிகளுக்காக உதவிப் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியா ளர்கள் ஆகியோர் அங்கேயே இருந்து பணிபுரிந்து வந்தனர். கடந்த 50 நாட்க ளுக்கு மேலாக அவர்களால் தமிழகத் திற்கு வர முடியவில்லை. பெரியாறு அணையில் ஏற்கனவே குமார், பரதன் ஆகிய இரண்டு உதவிப் பொறியாளர்கள் உள்ளனர். மூன்றாவ தாக பிரவீன் குமார் என்ற பொறியாளர் நிய மிக்கப்பட்டார். இவர் பராமரிப்புப் பணி களுக்காக பெரியாறு அணையில் பொறுப்பு ஏற்க இருந்தார். ஆனால் இவ ருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து அணையின் செயற் பொறியாளர் சாம் இர்வின் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் தெரி வித்தார். இதுகுறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. பின்னர் கேரள அரசிடம் எடுத்து ரைக்கப்பட்டு தமிழகப் பொறியாளர் பிர வீன்குமார் பெரியாறு அணை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பெரியாறு அணைக்குச் சென்று வந்த இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் உத்தரவின் பேரில் பொறியாளர் பிரவீன் குமார் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.