tamilnadu

img

இது எடமலக்குடி கிராமத்தின் கதை...

கேரளத்திலும் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. மாநில அரசு பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் கேரளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனா தொற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்தாதவாறு கிராம மக்கள் கட்டுப்பாடுடன் இருப்பது, பலரையும் கவர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்திற்கு அருகிலுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள எடமலக்குடி பழங்குடியினமக்கள் வசிக்கும் கிராமம்தான் அது.மூணாறிலிருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ளது இந்தக் கிராமம். 28 குடியிருப்புகளில் 75 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கின்றனர். ஜனநாயகப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதி இருந்தாலும் பழங்குடியின மக்கள் “ஊரு கூட்டம்” என்ற முறையையும் வைத்துள்ளனர்.  இங்கு ஒருவர் கூட தொற்றால் பாதிக்கப்படவில்லை.

காரணம் என்ன...
இதை சாத்தியமாக்கிக்கொண்டது பழங்குடியின மக்கள் தான். இவர்கள்தங்களுக்காகவே சுயமாக ஊரடங்கைவிதிப்பது, வெளியாட்கள் கிராமத்திற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவது, கிராமத்தில் விளைவித்த உணவுப் பொருட்களை மட்டும் உண்பது ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கு கிடைக்கும் தூய்மையான காற்றும் மற்றொரு காரணம். 

இது தொடர்பாக  பஞ்சாயத்துகளின் இயக்குநர் பி கே ஜெயஸ்ரீ கூறுகையில், இந்த பஞ்சாயத்தில் இருந்து ஒருகொரோனா பாதிப்பு ‘கூட’ பதிவாகவில்லை. மூணாரின் வனப்பிரிவுக்குள் அமைந்துள்ள எடமலக்குடி கிராமம் சுமார் 3,000 பேர் வசிக்கும் முதல் பழங்குடி கிராம பஞ்சாயத்து ஆகும். கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியபோது, உள்ளூர் பஞ்சாயத்து ஒரு கூட்டம் கூட்டி இப்பகுதியில் தங்களுக்காகவே ஊரடங்கு போட்டுக்கொண்டனர். அப்போதும் இங்கு யாரும்பாதிக்கப்படவில்லை” என்றார்.
பஞ்சாயத்து செயலாளர் வர்கீஸ் கூறுகையில், “மக்களுக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்றவையும் வழங்கப்பட்டது. மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை கிரிஜன் கூட்டுறவு சங்கம்உறுதி செய்தது” என்றார்.எடமலக்குடி போல் தமிழகத்திலும் கொரோனா தொற்று இல்லாத கிராமத்தைக் கண்டறிந்து அந்த கிராமங்களில் எதிர்காலத்திலும் தொற்று பரவாமல் தடுக்க முடியும். இதற்கு முன் முயற்சி எடுக்க வேண்டியது ஒவ்வொரு ஊராட்சியும், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களும் தான். இதைச் செய்தால் கொரோனா தொற்றை எளிதில் விரட்டிவிடலாம் என்பது மட்டும் உறுதி.

(டெக்ஹாரன் ஹெரால்டு  இணையதள தகவல்களிலிருந்து), 

தமிழில்  : ச.நல்லேந்திரன்

;