tamilnadu

img

தேனி : பேருந்து வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி

தேனி அருகே பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தேனி தீர்த்தத்தொட்டி பகுதியில் தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



;