தேனி, மே 24- தேனி அரசு மருத்துவம னையில் பிரசவித்த பெண்ணு க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணி க்கை 100 ஆக உயர்ந்து ள்ளது. தேனி மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு, தேனி அரசு மருத் துவக் கல்லூரி மருத்து வமனை, கம்பம் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதில், போடியைச் சேர்ந்த பெண், ஓடைப்பட் டியைச் சேர்ந்த முதியவர் என மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்தனர். 50 பேர் கொ ரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். மாவட்டத்தில் இரு குழந்தைகள் உட்பட மொத்தம் 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தேனி சுப்பன் தெருவை சேர்ந்த 21 வயது பெண்னுக்கு கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று இல்லாத நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணியில் அனும திக்கப்பட்டு பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 8-ஆம் தேதி தேனி நகராட்சி நகர் நல மருத்துவ மனையில் அப்பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது .பின்னர் 14- ஆம் தேதி பிரசவத்திற்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த சனிக்கி ழமை வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய நிலையில் அவ ருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது .அப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று இல்லாத பெண்ணுக்கு ,தேனி அரசு மருத்துவம னையில் பிரசவத்திற்கு பின் தொற்று கண்டறியப்பட்ட தற்கு பின் பிரசவ வார்டுக ளிலிருந்து பெண்களை பாது காப்பான இடங்களுக்கு அனுப்பி, கிருமி நாசினி தெளித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அலட்சியம் காட்டி வருகிறார்.
ஆட்சியர் பல்லவி பல்தேவ் நடவடிக்கை ஏற்புடையதா?
தேனி மாவட்டத்தில் கொ ரோனா தடுப்பு நடவடிக் கைக்காக நிதி கொடுக்க வரும் நன்கொடையா ளர்களை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவமதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தேனியை தவிர மற்ற மாவட்டங்களில் பணியாற் றும் மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் ,தொழிலதி பர்கள், ஒப்பந்ததார்கள் உட்பட எவர் கொடுக்கும் சிறிய தொகையாக இருந்தா லும் அவர்களை மதித்து நேர டியாக நிதியைப் பெற்று, செய்தித்துறை மூலம் செய்தி வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகிறார்கள் .ஆனால் தேனி மாவட்ட ஆட்சியர் இதற்கு நேர்மாறாக செயல் பட்டு ருகிறார். நிதி கொ டுக்க வரும் தன்னார்வ லர்களை சந்திக்க மறுப்புத் தெரிவித்து, அவர்களை அவ மதிக்கும் விதமாக, தனக்கு கீழ் உள்ள கீழ் நிலை அலுவ லர்களை கொண்டு வாங்க வைக்கிறார்.
ஆண்டிபட்டி ஒன்றி யக்குழு உறுப்பினரும், அதி முக ஒன்றியச் செயலாள ருமான லோகிராஜன் கொரோ னா நிதி ரூ 10 லட்சம் கொடுக்க வந்துள்ளார். அலுவல கத்தில் இருந்து கொண்டே மாவட்ட ஆட்சியர் , அவரை சந்திக்க மறுத்து, நிதியை உத வியாளரிடம் கொடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். கருங்கல்-ஜல்லி உற்பத்தியாளர் சங்கம், ஏல விவசாயிகள், வியாபாரிகள் சங்கம் சார்பில் தலா ரூ 10 லட்சம் கொரோனா நிதியை எடுத்து கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயற்சித்துள்ளனர். அவர் நேரில் பெற மறுத்து, கீழ் நிலை அதிகாரியிடம் கொடுக் கச் சொல்லி அவர்களை அவ மதித்து விட்டார் . கொரோனா தடுப்பு நடவ டிக்கைக்காக பொதுமக்கள், தன்னார்வலர்கள் கொடுக் கும் முகக்கவசம், கிருமி நாசினி பாட்டில்களை நேரில் பெற்று அவர்களை பாராட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தி யில் நன்கொடையா ளர்களை அவமதித்து வருவ தாக தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் மீது சமூக ஆர்வலர் கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-நமது நிருபர்