தேனி, டிச.5- நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாண வரின் பெற்றோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக இது வரை 5 மாணவர்கள், அவர்களது பெற்றோர் 5 பேர் என 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மாணவர்கள் அனை வருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி யது. பெற்றோர்கள் சரவணன், டேவிஸ், வெங்கடேசன், முகமது சபி ஆகிய நான்கு பேருக்கு தேனி நீதித்துறை நடு வர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதில் மாணவி பிரி யங்காவின் தாய் மைனாவதி மட்டும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். இதற்கிடையே சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல் லூரியைச் சேர்ந்த மாணவன் ரிஷிகந்த் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாண வன் மற்றும் அவரது தந்தை ரவிக்குமார் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் மாணவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப் பட்டது. தந்தை ரவிக்குமாரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜ ராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் புதனன்று ரவிக்குமார் சரணடைந்தார். பின்னர் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ரவிக்குமாருக்கு மருத்துவ பரிசோதனை நடை பெற்றது. இதையடுத்து தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள சிபி சிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட ரவிக்குமாரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.