தேனி, மே 28- தேனி, கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பரமத்தேவர் மகன் மகேந்தி ரன்(54). இவரது மனைவி தங்கமணி(48). மகேந்திரனுக்கும் அவரது தாயார் ஒச்சம் மாள் என்பவருக்கும் சொத்துப் பிரச்சனை இருந்துள்ளது. இது குறித்து தேனி மக ளிர் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகார் அளித்திருந்ததாகவும், இந்த புகார் குறித்து நீதிமன்றத்தில் முறையீட்டு தீர்வு காணுமாறு காவல்துறையினர் தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மகேந்திரன், தங்கமணி ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உட லில் மண்ணெண்ணை ஊற்றி தீக்கு ளிக்க முயன்றுள்ளனர். அங்கு பாது காப்புப் பணியில் இருந்த காவல்துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தி, தேனி காவல் நிலையத்திற்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து தேனி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து மகேந்தி ரன், தங்கமணி ஆகியோரைக் கைது செய்தனர்.