tamilnadu

வளைகுடா வாழ் இந்தியர்கள் கலக்கம்

தேனி, மார்ச் 1- குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தில்லி கலவரத்தால் வளைகுடா நாடுகள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கலக்கமடைந்துள்ளதாக இலக்கியப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.  தில்லியில் 42 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்ப வத்தை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் போடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது, மத்திய அரசு கொண்டுவந்து ள்ள இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தச் சட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என இஸ்லாமிய சமுதாய மக்கள் கவலையில் உறைந்து போயுள்ளனர் .மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. 12 மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துரோக சட்டத்திருத்தற்கு துணை போன அதிமுகவை 2021-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழக மக்கள் சுத்த மாகத் துடைத்து எடுப்பார்கள். கலவரத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் கண்ட னம் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார். கூட்டத்திற்கு பள்ளிவாசல்களின் தலைவர் சர்புதீன் தலைமை வகித்தார். பெரிய பள்ளிவாசல் தலைவர் தங்கப்பா முன்னிலை வகித்தார். முசிக் மந்திரி வரவேற்ற்றார். தி.க. மாவட்டத்தலைவர் ச.ரகுநாதன், திமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லட்சுமணன், நகர் செயலாளர் மாவீ.செல்வ ராஜ், காங்கிரஸ் மாவட்டத் துணைத்தலைவர் சன்னாசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன், சிபிஐ மாவட்டத் துணைச்செயலாளர் பெருமாள், வழக்கறிஞர் மகீதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.