tamilnadu

img

முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்பு சேவை ....

தேனி:
21 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள மாநில மின்சார வாரியம்மின் இணைப்பு வழங்கியது. இதற்கான விழா பிப்.1-ஆம் தேதி வண்டிப்பெரியாறில், முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்புக் கொடுக்கும் நிகழ்வு தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி மின் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் தீன் குரியகோஸ், பீர்மேடு சட்டமன்றஉறுப்பினர் இ.எஸ்.பிஜிமோள், கேரள மின்வாரிய இயக்குநர்கள் பி.குமாரன், வி.சிவதாசன், தலைமைபொறியாளர் ஜேம்ஸ் எம்.டேவிட், தமிழகத்தின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்,தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்  ம.கிருஷ்ணன்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வனப்பகுதியில் இருந்து உயரழுத்த மின்சாரக் கம்பிகள் மூலம் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதன்மூலம் அணைப்பகுதியில் மின் விளக்குகள், 13 மதகுகள் இயங்கின.

;