tamilnadu

சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்

தேனி, மே 19- உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 180 தொழி லாளர்கள் தேனியிலிருத்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். தேனி மாவட்டத்தில் வடமாநில தொழி லாளர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கின் றனர்.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள தால் வடமாநில தொழிலாளர்கள் வேலை யின்றியும், வருமானம் இன்றியும் பாதிக்கப் பட்டனர்.  இதையடுத்து வடமாநில தொழிலா ளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர். அவர்களை சொந்த ஊருக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு செய்தது. தேனி மாவட்டத்தில் சுமார் 1,500 வடமாநில தொழி லாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்தனர். அதன்படி, முதற்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 180 தொழிலாளர்கள் திங்களன்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். தேனியில் இருந்து புறப்பட்டுச் சென்ற வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் முகக்கவசம் ஆகிய வற்றை வழங்கி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் வழி யனுப்பி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து பீகார் மாநி லத்தை சேர்ந்த தொழிலாளர்கள் புதன் கிழமை தங்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். 

;