tamilnadu

கொரோனா தொற்றை மூடி மறைப்பது மதுக்கடைக்கா? மக்களுக்கு பரப்பவா?

தேனி,மே 12- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றை முடி மறைப்பது மதுக்கடை திறக்கும் நடவடிக்கைக்கா? அல்லது மக்களுக்கு பரப்பவா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அறிவிப்பதில் கடந்த சில நாட்களாக பெரும் குளறுபடி ஏற்பட்டு வருகிறது. கொரோனா செய்தி தொடர் பாக மாவட்ட செய்திதுறை சார்பில் செய்தி வெளியிட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ,தானே வாட்ஸ் ஆப்பில் செய்தி வெளியிட்டு வருகிறார்.தற் போது தேனி மாவட்டத்திற்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிடும் கொரோனா தொற்று தொடர்பான அறிவிப்பு மக்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற் படுத்தி வருகிறது. குறிப்பாக சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் கடந்த 8 ஆம் தேதி அங்குள்ள அரசு சுகாதார நிலையத்தில் வேறு இடங்களில் வந்த வர்கள்,ஏற்கனவே தொற்று ஏற்பட்ட வர்களுடன் தொடர்புடையவர்களிடம் ரத்த, சளி உள்ளிட்ட மாதிரிகள் பரி சோதனை செய்யப்பட்டது.

இதில்ஒரே தெருவைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தேனி அரசு மருத்துவ கல் லூரி மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டனர்.அங்கு மேலும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் மாவட்ட நிர்வாகம் மூடி மறைத்து விட்டது. மாநில சுகாதா ரத்துறையும் எண்ணிக்கையை அறி விக்க வில்லை .கடந்த 10 ஆம் தேதி 2 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக அறி வித்தது.11 ஆம் தேதி பாதிப்பு ஏதும் இல்லை என மாநில சுகாதார துறை அறிவித்தது.தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள் தொடர்பான அறிவிப்பை மூடி மறைத்தது மக்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கடைக்கா? மக்களுக்கு பரப்பவா?
மதுக்கடை திறப்பு தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை யை குறைத்து சொல்லவே மறைக்கப் படுவதாக ஒருபிரிவினர் குற்றம் சாட்டி யுள்ளனர் .கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புர்ணவு ஏற்படுத் தும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதி களை அறிவித்து, அருகில் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மூடி மறைப்பது மக்களுக்கு கொரோனவை பரப்பும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ள னர். ஓடைப்பட்டி என்பது முழுமையான விவசாய பகுதியாகும் .பல நூறு ஏக்க ரில் திராட்சை பயிரிடப்பட்டு வியாபாரி கள், தொழிலாளர்கள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. கொரோனா தொற்று தொடர்பாக மறைக்கப்படா மல் உண்மையை மக்களுக்கு தெரி வித்தால் அவர்களும் விழிப்புணர்வு பெற்று பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல் வதை தவிர்க்க வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப் பட்ட பகுதிகளை அறிவித்து, மேலும் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என மத்திய, மாநில அரசுகளை பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.      

       (ந.நி.)

;