தேனி, மே 25- தேனி மாவட்டத்தில் துபா யிலிருந்து வந்த போடியைச் சேர்ந்த இளைஞர் உள்பட மொத்தம் 5 பேருக்கு ஞாயிற் றுக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்.1 -ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை மொத்தம் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை மற் றும் கம்பம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். இதில், போடியைச் சேர்ந்த பெண், ஓடைப்பட்டியைச் சேர்ந்த முதி யவர் உயிரிழந்தனர். மொத்தம் 54 பேர் கரோனா பாதிப்பிலி ருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது தேனி மாவட்டத்திற்கு துபா யிலிருந்து வந்த போடியைச் சேர்ந்த 27 வயதுடைய இளை ஞர், கேரளத்திலிருந்து வந்து போடினூஜக்கம நாயக்கன்பட்டி யில் தங்கியிருந்த மேலச்சொக்க நாதபுரத்தைச் சேர்ந்த 20 வயது டைய இளைஞர், சென்னையிலி ருந்து வந்த கூடலூரைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர், மேற்கு வங்க மாநிலத்திற் குச் சென்று வந்த தேனி அருகே அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஆம்னி பேருந்து ஓட்டுநர், சென்னையிலிருந்து ஓடைப்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த சென்னையைச் சேர்ந்த 35 வயது டைய நபர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
41 பேர் அனுமதி
இந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா பாதிப் பிற்கு சிகிச்சை பெற்று வந்த வர்களில், 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.மாவட்டத்தில் தற்போது, தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் 39 பேர், கம்பம் அரசு மருத்துவ மனையில் 2 குழந்தைகள் என மொத்தம் 41 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
புகைப்படம் எடுத்த அதிமுகவினர்
துபாயில் நோயால் அவதிப் பட்டு தேனி நாடாளுமன்ற உறுப்பி னர் ரவீந்திரநாத்குமார் உள் ளிட்டோர் உதவியுடன் தேனி வந்தி ருந்து, தேனி அரசு மருத்துவ மனையில் தனிமைப்படுத்தப் பட்ட வாலிபரை அதிமுகவினர் சந்தித்து நலம் விசாரிக்க மருத்து வமனை நிர்வாகம் அனுமதித்தது. அவர்களும் அந்த வாலிபருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். எதிர்பாராதவிதமாக அந்த வாலி பருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த வாலிபரை சந் தித்த நபர்களை தேடி அழைத்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலை க்கு சுகாதாரத்துறை தள்ளப் பட்டுள்ளது. சென்னையிலிருந்து குடும்பத் தோடு உத்தமபாளையம் வந்த 32 வயது பெண்ணுக்கும், கூடலூ ரில் 8 வயது குழந்தைக்கும் திங்க ளன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குழந்தைக்கு தந்தை மூலம் தொற்று ஏற்பட் டுள்ளது.