tamilnadu

தேனியில் 83 பேருக்கு கொரோனா உறுதி

தேனி, ஜூலை 5- தேனி மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். போடி பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 31 வயது பெண் ,31வயது ஆண் சுப்பு முதலி தெருவை சேர்ந்த 33 வயது நபர், சுப்பிரமணி கோவில் தெருவை சேர்ந்த 30 வயது பெண், நந்தவனத்தை சேர்ந்த 33 வயது பெண், அவரது 10, 8 வயது குழந்தை, அதே தெருவை சேர்ந்த 45 வயது பெண் என ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்த 54 வயது பெண், ஆண்டிபட்டி அருகே கோவில் பட்டியை சேர்ந்த 32 வயது நபர், ஆண்டி பட்டி சேடப்பட்டியை சேர்ந்த 25 வயது நபர், ஆண்டிபட்டி க.விலக்கை சேர்ந்த 24 வயது நபர், பிச்சம்பட்டியை சேர்ந்த 24 வயது நபர் என நான்கு பேருக்கு கொரோனா உறுதி யானது. சின்னமனூரில் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த 63 வயது நபர், வெள்ளை யன் தெருவை சேர்ந்த 38 வயது நபர், கே.கே.குளம் புதிய அரிசி ஆலை தெருவை சேர்ந்த 19 வயது நபருக்கும் என 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இராஜேந்திரா நகரை சேர்ந்த ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மனைவிக்கும், வருஷ நாடு பவள நகரை சேர்ந்த 75 வயது நபர், நெஞ்சுவலி காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தேனி வட்டத்தில் ஏழு பெண்கள் உட்பட 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெரிய குளம் என்ஜிஓ காலனியில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேருக்கும், விஆர்பி நாயுடு தெருவில் தந்தை, மகன் என இருவர் உட்பட 12 பேருக்கு கொரோன தொற்று கண்டறி யப்பட்டுள்ளது. கம்பத்தில் எட்டு பெண்கள் உட்பட 14 பேர் என 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

;