tamilnadu

img

யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்த 2 பேர் கைது  

தேனி அருகே யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தமலைப்பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் சாக்கு மூட்டையை தூக்கி கொண்டு வந்தனர். அவர்களை சோதனை செய்ததில் சாக்குப்பையில் வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றியின் உடல் மற்றும் வெடிமருந்து இருப்பதும் தெரியவந்தது.  

இதையடுத்து வனத்துறையினர் இருவரிடம் விசாரணை நடத்தியதில், ஆண்டிப்பட்டி தாலுகா பாலக்கோம்பையை சேர்ந்த சிவக்குமார்(26), ஏத்தக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த வேல்சாமி(29) என்று தெரியவந்தது.  விசாரணையில் இருவரும் யூடியூப் பார்த்து வெடிமருந்து தயார் செய்து காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.  

அதனைதொடர்ந்து அவர்களிடமிருந்த காட்டுப்பன்றி உடல் மற்றும் வெடிமருந்தை வனத்துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். 

;