tamilnadu

தேனி மாவட்டத்தில்  317 பேருக்கு தொற்று

தேனி, ஆக.1- தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் . தேனி அரசு மருத்துவக்கல்லூரி  மருத்து வமனையில் 29-ஆம் தேதி அனுமதிக்கப் பட்ட தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 29-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட தேனி அருகே முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த 80 வயது முதியவர் சனிக்கிழமை அதிகாலை உயி ரிழந்தார். 29 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ராஜதானி அருகே தெப்பம்பட்டியை சேர்ந்த 65 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். 29- ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கம்பத் தைச் சேர்ந்த முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் . ஆண்டிபட்டி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த 27 வயது தீயணைப்பு வீரர், அல்லிநகரம் காவல்நிலையத்தில் பணிபுரியும் 37 வயது முதுநிலைக் காவலர் உட்பட ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா கண்டறியப் பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,345  ஆக உயர்ந்துள்ளது .தேனி  மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பலி யானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள் ளது.12 பேர் பரிசோதனை முடிவு தெரியும் முன்பே இறந்து விட்டனர்.