tamilnadu

img

தெலுங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி பின்னடைவு

ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் 17 எம்.பி. தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று அம்மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் கூறியிருந்தார்.

இந்நிலையில், சந்திரசேகர ராவின் கட்சி 8 இடங்களில்மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ராவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், காங்கிரஸ், பாஜக கட்சிகள் தலா 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.தெலுங்கானாவில் காங்கிரஸ், பாஜகவுக்கு எந்த இடமும் கிடைக்காது என்றுதான் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கூறியிருந்தன. ஆனால், அந்த கணிப்புகள் தற்போதுபொய்த்துப் போயுள்ளன. எதிர்க்கட்சிகள் 9 இடங்களை கைப்பற்றியுள்ளன.

சந்திரசேகர ராவ் மகள் கவிதா நிசாமாபாத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்கு விவசாயிகள் நூற்றுக்கணக்கில் கவிதாவுக்குப் போட்டியாக களமிறங்கியதால் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மேலும் அக்கட்சியின் மூத்த தலைவர் வினோத் குமார் கரீம் நகரில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

;