தென்காசி, ஜூன் 2- கேரளாவில் பருவமழை தொடங்கி யதை அடுத்து குற்றாலத்தல் சீசன் அறிகுறி ஏற்பட்டு உள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் கேரளாவில் பருவ மழை தொடங்கும் என வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி திங்க ளன்று கேரளாவில் பருவமழை தொடங்கி யது. அதை தொடர்ந்து செவ்வாயன்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. குற்றாலத்தில் இதமான சூழலுடன் சாரல் பெய்ய தொடங்கி உள்ளது.குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, கடையம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தாக்கம் தென்படு வதால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளு குளு நிலமைக்கு மாறி வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் சில தினங்களுக்குள் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி விடும். கொரோனா ஊரடங்கால் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத னால் அருவிக்கு சுற்றுலா பயணிகள், பொது மக்கள் செல்ல இயலாத நிலை உள்ளது.குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனு மதிக்க தலைமைச் செயலாளரிடம் தென் காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனு மதி கிடைத்தாலும் வழக்கம்போல் சுற்று லாப்பயணிகள் கூட்டம் இருக்குமா என்பது சந்தேகம்தான். மொத்தத்தில் இந்த ஆண்டு சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் குற்றா லத்தில் சீசன் துவங்குகிறது.