tamilnadu

விபத்தில் வாலிபர் பலி

தூத்துக்குடி, ஜூன் 27- தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் வாலி பர் உயிரிழந்தார். தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பால்பாண்டி, இவர் தூத்துக் குடி மாவட்ட அமமுக வர்த்தக அணி நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் ஸ்டான்லி கமலவேல் (22). இவர் புதுக் கோட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஜிம் வைத்து நடத்தி வருகிறார். ஞாயிறன்று காலை சுமார் 5 மணியளவில் இவர் புதுக் கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி பாளை., ரோட்டில் உள்ள வ.உ.சி கல்லுாரி அருகே வரும் போது, பைக் திடீரென நிலைதடுமாறி மின்கம்பத் தில் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஸ்டான்லி கமலவேலை தூத்துக் குடி அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.