tamilnadu

முறப்பநாட்டில்  ஆற்றில் மூழ்கி  வாலிபர் பலி

 

தூத்துக்குடி, ஜன.16- தூத்துக்குடி மாவட்டம் முறப்ப நாட்டில் ஆற்றில் மூழ்கி வாலிபர் பரி தாபமாக பலியானார். தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் முத்துக்குமார் (33), இவரும் இவரது நண்பர்கள் ஆனந்த், ராஜ், மிக்கேல், மாரி செல்வம், ஆகியோர் புதனன்று முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அப் போது முத்துக்குமார் டைவ் அடித்தாராம். இதில் ஆற்றிலுள்ள பாறையில் மோதி தலையில் காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரி ழந்தார்.  இது குறித்த தகவல் அறிந்ததும் வியாழனன்று காலை தீயணைப்பு வீரர்கள் ,பொதுமக்கள் உதவியுடன் அங்கு வந்து இறந்தவர் உடலை மீட்டனர். முத்துக்குமாருக்கு திரு மணம் முடிந்து இரண்டு குழந்தை கள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதி ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.