tamilnadu

விவசாய கடன் அட்டை  பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, ஆக.9- விவசாயிகள் தங்களுக்கு தேவை யான வேளாண் இடுபொருள்களை உரிய நேரத்தில் பெற விவசாய கடன் அட்டை அவசியமாகிறது. விவசாய கடன் அட்டை வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நில உடைமை அடிப்படையில் பிணையமில்லா கடனாக ரூ.1.60 லட்சம் வரை பெறலாம். விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி கள் போன்ற வேளாண் இடுபொருள்கள் வாங்குவதற்கான நிதி உதவியை இந்தக் கடன் அட்டை மூலம் பெற்று பயன் பெற லாம். தற்போது தூத்துக்குடி மாவட்டத் தில் உள்ள அனைத்து வேளாண் விரி வாக்க மையங்களிலும் விவசாய கடன் அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங் களை விவசாயிகள் அளிக்கலாம். விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல்களுடன் தங்களின் இரண்டு புகைப்படங்களை இணைத்து தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், வணிக வங்கி கிளைகள் அல்லது கூட்டுறவு வங்கியை அணுகி விவசாய கடன் அட்டை பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.ஐ. முகைதீன் தெரிவித்துள்ளார்.