tamilnadu

வரதட்சணை கேட்டு பெண்ணை தனியறையில் அடைத்து துன்புறுத்தல் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி, மார்ச் 7- கருங்குளம் அருகே கூடுதல் வரதட்ச ணை கேட்டு பெண்ணை தனியறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக கணவர்  உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்ப ட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது: தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அரு கேயுள்ள தெற்கு காரச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் கணேசன்(32). இவருக்கும் நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள கட்டாலங்குளம கிராமத்தைச் சேர்ந்த உஷாராணி (29) என்பவருக்கும் கடந்த 5.2.2018-ல் திருமணம் நடந்தது. திரு மணத்திற்கு பின் உஷாராணி தனது மாம னார் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து  வந்தார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கணேசன் ஒமன் நாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டார். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதால் கூடுதல் வரதட்சணை கேட்டு உஷாராணியை அவரது மாமனாரும், மாமியாரும் சாப்பாடு கொடுக்காமல் தனிய றையில் அடைத்து வைத்து கொடுமை படுத்தி உள்ளனர். இதுகுறித்து உஷாராணி  கணவருக்கு போன் மூலம் தகவல் தெரி வித்தும் அவர் குறித்து கேட்கவில்லை. இதை யடுத்து கணவர் வீட்டில் இருந்து தப்பிய உஷாராணி, திருவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செய்த புகா ரின் பேரில், அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேர் மீது இன்ஸ்பெகடர் லட்சுமி பிரபா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

;