தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கனிமொழி எம்.பி. புதனன்று ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆய்வு செய்யவும், அவர்கள் தேவைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வந்துள்ளேன். கொரோனா சிகிச்சைக்காக தனி கட்டடத்தையே ஒதுக்கி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதி தேவை என்று என்னிடம் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து அந்த தொகை இன்றே ஒதுக்கப்படும் என்றார்.
படம் டியுடிகளை கனிமொழி ஆய்வு