tamilnadu

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி, ஏப்.20-தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வஉசிஅரசு பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் வியாழனன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத் தேர்தல் நடைபெற்ற விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் ஓட்டுப்பதிவுமுடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்குஎண்ணும் மையமான தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, எஸ்பி முரளி ரம்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் நாள் வரை இந்த பாதுகாப்பு அளிக்கப்படும். முதல் அடுக்கு பாதுகாப்பில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் இருப்பர். 2-வது அடுக்கு பாதுகாப்பில் ஆயுதப்படை போலீசார் பணியில் இருப்பர். 3-வது அடுக்கு பாதுகாப்பில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 3 ஓட்டு எண்ணும் மையங்களிலும் ஓட்டு எண்ணப்படும் நாள் வரை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

;