tamilnadu

உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற புதிய இணையதளம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி, ஜூன் 8-  புதிய இணையதள முகவரியை  பயன்படுத்தி வணிகர்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உணவுப் பொருள்கள் தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள், மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், தெருவோர வணிகா்கள், விழாக் கால விற்பனையாளா்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவு வணிகா்களும், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் உரிமத்தை பெற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 01.06.2020 முதல் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற https://foscos.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஜுன் 1-ற்குப் பின்னர் பழைய இணையத்தளத்தில் உணவு பாதுகாப்பு உரிமத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

உணவு வணிகர்களின் ஆண்டு விற்றுக்கொள்முதல் அடிப்படையில் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் என இருவகையான உரிமங்கள் உணவு பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும். மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வரம்பிற்குள் பின்வரும் உணவு வணிகர்கள் வருவார்கள். இதற்கு முன்பு  இணைய தளத்தில் விண்ணப்பித்து உணவுப் பொருள்களின் தயாரிப்பிற்கு உரிமம் பெற்ற உணவு தயாரிப்பாளா்கள், இணைய தளத்தில், பழைய ஊகதந இணைய தளத்துக்கான அதே பயனாளா் அடையாளப் பெயா் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்நுழைந்து, தரம் நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பொருள்களை தோ்வு செய்து உரிமத்தை திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். இதற்கு கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. ஆனால், நிறுவனத்தின் பெயா் மாற்ற, உணவு வணிகத்தின் வகை அல்லது உற்பத்தி திறன் ஆகியவற்றை திருத்தம் செய்ய ரூ.1000 கட்டணத்துடன் வித்தியாசப்படும் கட்டணம் ஏதுமிருந்தால் அதையும் சோ்த்து செலுத்த வேண்டும். மேலும், இதுகுறித்து தகவல் அறிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் அலுவலகத்தில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.