தூத்துக்குடி,அக்.2- 150வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 5000 பய னுள்ள மரக்கன்றுகள் மற்றும் 200 பனை விதைகள் நடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் காவல் கண்கா ணிப்பாளர் தலைமையிலும், அனைத்து உட்கோட்ட காவல்துறை அலுவலகங்களில் அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையிலும் மற்றும் அனைத்து காவல் நிலையங்களில் அந்தந்த காவல் நிலைய காவல் ஆய்வாளர் கள் தலைமையிலும் இயற்கை வளம் பாதுகாக்க 5000 பயனுள்ள மரக்கன்றுகள் மற்றும் 2000 பனை விதைகள் நடப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . அருண் பாலகோபாலன், தலைமையில் 500 பயனுள்ள மரக்கன்றுகள், சுமார் 200 பனை விதைகள் நடப்பட்டது. இதில் மாரல் பவுண்டேஷன் இந்தியா நிறுவன தலைவர் மற்றும் 4 கோடி மர வளர்ப்பு திட்டக் குழு ஒருங்கிணைப்பாளர். விவே கானந்தன், மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் மாரி யப்பன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.