tamilnadu

img

நிர்வாகமே ஏற்க உத்தரவுஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்ற முடிவு

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளைத் தமிழ்நாடு அரசே அகற்ற முடிவு செய்துள்ளது

இந்த பணிகளை மேற்கொள்ளத் துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றுவதற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலைக்கழிவுகளை அகற்றுபவர்கள் பக்கவாட்டில் உள்ள வாசலை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழுதான இயந்திரங்களை அகற்ற , மூலப்பொருட்கள், உதிரிப்பாகங்களை அலைக்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதி கோரிய ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது.

;