tamilnadu

மருத்துவர் பலி.... கொரோனா அலட்சியம் வேண்டாம்... உரிய நேர சிகிச்சையில் குணப்படுத்தி விடலாம்

தூத்துக்குடி:
கொரோனா சிகிச்சை தொடர் பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:

கொரோனா நோய் அறிகுறிகளாகிய காய்ச்சல், இருமல், உடல் வலி, மூச்சுத்திணறல், உடல் சோர்வு போன்றவைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுகி கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம்தொற்றினை கண்டறிந்து விரைவாக சிகிச்சையை ஆரம்பித்து நோயினை குணப்படுத்தி விடலாம்.

இது சாதாரண காய்ச்சல், இருமல், உடல்வலி, உடற்ச்சோர்வு என்று அஜாக்கிரதையாக இருந்து விட்டு 1 நாள், 2 நாட்கள் கழித்துசிகிச்சை மேற்கொள்ள வந்தால் கூட காப்பாற்றுவது கடினம். முக்கியமாக இணை நோய் உள்ளவர்கள் (comorbid conditions),வயதானவர்கள் அதிலும் இணைநோயோடு உள்ள வயதானவர் கள் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டு காலந்தாழ்த்தி வருவதால் மரணமடைகின்றனர். சாத்தான்குளத்தைச் சேர்ந்த 80 வயது சித்த மருத்துவருக்கு கொரோனா அறிகுறிகள் ஆக.24-ம் தேதி ஆரம்பித்துள்ளது. சித்தமருத்துவர் என்பதால் தானாகவே மருந்து உட்கொண்டுள்ளார். அவரின் வயது, அறிகுறிகளை வைத்துமருத்துவர்கள் மருத்துவமனையில் சேர அறிவுறுத்தினர். ஆனால்அவர் அதை மறுத்து வீடு சென் றுள்ளார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உள்ளது என தெரியவந்தது. இதையடுத்து அவரைதிருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் ஆம்புலன்சிலேயே இறந்துவிட்டார். அறிகுறி ஆரம்பித்தவுடன் சிகிச்சை ஆரம்பித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம். முதியவோர்கள், இணை நோய் உள்ளவர்கள் பலர் சரியான நேரத்தில் மருத்துவமனையை அணுகி மருத்துவம் பார்த்துக் கொண்டதால் குணமாகி விடலாம். 

இது முதியவர்கள் மற்றும்இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. எந்த வயதினராக இருந்தாலும் கொரோனா அறிகுறி ஆரம்பித்தவுடன் பரிசோதனை செய்து கொரோனா உள்ளதா என கண்டறிந்து முறையாக மருத்துவம் செய்து கொண்டால் உயிர் இழப்புகள் இல்லாமல் தவிர்க்கலாம் என ஆட்சியர்சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

;