திருச்சிராப்பள்ளி, டிச.13- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு விற்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்தும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வியா ழனன்று திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். வேலை நிறுத்தத் தை விளக்கி ஏஐசிசிடியு மாவட்ட தலை வர் தேசிகன், ஏஐசிடியு மாவட்டத் தலை வர் சுரேஷ், ஐஎன்சிடியு மாவட்டத் தலைவர் துரைராஜ், தொமுச மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். பிரச்சாரத்தில் ஏஐசிடியு மணி, சிஐடியு விஜயேந்திரன், ராஜூ உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன் நன்றி கூறினார்.