tamilnadu

தாமோதர நகர் பகுதிக்கு சீல் வைப்பு

தூத்துக்குடி, ஜூலை 22- தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,914-ஆக அதிகரித்து உள்ளது. இதில் 1,781 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 26 பேர் இறந்து உள்ளனர். இந்நிலையில் மாநகர பகுதிகளில் தொற்று அதிகம் உள்ள சண்முகபுரம், தாமோ தரநகர், வண்ணார்தெரு, தச்சர்தெரு, பிரை யண்ட்நகர் 3, 7, 8, 9-வது தெரு, பூபால ராயர்புரம், சாரங்கபாணி தெரு உள்ளிட்ட இடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதி மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதில் தாமோ தர நகர் பகுதியில் 55 பேருக்கு நோய் பர வல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி தனிமைப்படுத்த நோய் கட்டுப் பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இதை யடுத்து புதன் காலை தாமோதர நகர் மெயின் ரோடு பகுதியில் தகர சீட்டுகளால் வழி யடைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  இதனால் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தாமோதர நகர் பகுதி தூத்துக்குடியின் மைய பகுதி என்ப தால் அப்பகுதியிலிருந்து வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.  அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த பகுதியை நோய் கட்டுப்பட்டு மண்டல மாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மிக வும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.