tamilnadu

53 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு கடன் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி திட்டம்

தூத்துக்குடி, ஜூன் 3- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட அவசர கால கடன் திட்டத்தில் 53 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்களுக்கும் வணிகர்களுக்கும் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கி கடந்த 98 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்து வரு கிறது.கோவிட் 19 தொற்றுநோய் நாடு முழு வதும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது போல் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரத்தை யும் பாதித்துள்ளது. இந்திய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார பாதிப்பை மீட்டெ டுக்க சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தில் ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வங்கிகள் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்தரவாதமளிக்கப்பட்ட அவசர கால கடன் திட்டத்தின் மூலம் கூடுதல் பாது காப்பு இல்லாமல் ரூ.3 லட்சம் கோடி கூடு தல் கடன் அளிக்கும் திட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கே.வி.ராம மூர்த்தி கூறும்போது, தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கி தனது வாடிக்கையாளர் களாகிய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வணிகர்களுக்கு உத விக்கரம் நீட்டுவதற்கு விரிவான ஏற்பாடு களை செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 29.2.2020 தேதி யின்படி அவர்களின் கணக்குகளில் இருப்பு நிலுவையில் உள்ள தொகையில் 20 சத வீதம் கூடுதல் கடனாக பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் எங்களது வாடிக்கையா ளர்களான 53 ஆயிரம் சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள் பயனடைவார்கள். இந்த கடனுக்காக உத்தர வாத கட்டணம், பிராசசிங் கட்டணம் மற்றும் வேறு கட்டணங்கள் கிடையாது. இந்த திட் டத்தின் கீழ் கடன் வழங்க அனைத்து கிளை களுக்கும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி கிளைகளை அணுகலாம் என அவர் தெரிவித்தார்.

;