tamilnadu

கோவில்பட்டியில் இன்று குழந்தைகளுக்கு இலவச இருதய பரிசோதனை முகாம்

தூத்துக்குடி, மார்ச் 7- கோவில்பட்டியில் ஞாயி றன்று (மார்ச் 8) குழந்தை களுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடை பெறுகிறது. இதுகுறித்து ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் விநாயகா ஜி.ரமேஷ் விடுத்து ள்ள அறிக்கையில், கோவி ல்பட்டி ரோட்டரி சங்கம்,  சென்னை அப்பல்லோ குழ ந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து கோ வில்பட்டி வெங்கடேஷ் நகர் சௌபாக்யா மஹாலில் குழந்தைகளுக்கான இல வச இருதய பரிசோதனை முகாம் மார்ச் 8 (ஞாயி ற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இம்முகாமில், பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், ஏற்கெனவே குழ ந்தைகளுக்கு சிகிச்சை பெற்றிருந்தால், அதற்கான மருத்துவ அறிக்கையுடன் வந்து இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படுதல், உடல் எடை அதிகரிக்காமல் இருந்தா லோ, மூச்சுத்திணறல், இதய அடைப்பு, குழந்தைகளுக்கு நடுக்கம், நினைவு இழத்தல், அளவுக்கு அதிகமாக விய ர்த்தல், குழந்தையின் மேனி நீல நிறமாக மாறுதல் உள்ளி ட்ட நோய்களுக்கு இம்முகா மில் பங்கெடுத்து பரிசோ தனை செய்து கொள்ளலாம். பரிசோதனையில் பங்கே ற்போர் முதலமைச்சா் காப்பீ ட்டுத் திட்ட அட்டை இருந்தால்  அதையும் கொண்டு வர வேண்டும். பரிசோத னைக்குப் பின், குழந்தைக ளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் இல வசமாக இருதய அறுவை சிகிச்சை செய்துதரப்படும். இதற்கு முன் குழந்தை களுக்கு ஏதேனும் மருத்துவ  ஆலோசனை பெற்றிரு ந்தால், அதற்கான அறிக்கை யையும் கொண்டு வர வேண்டும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளு மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;