tamilnadu

img

தூத்துக்குடியில் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடி, மே 31- ஊதிய குறைப்பு நடவடிக்கை யை எதிர்த்து தூத்துக்குடியில் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நாடுமுழுவதும் ஊர டங்கு உத்தரவு அமுலுக்கு வந் தது. மக்களோடு, அரசு மற்றும் தனியார் துறைகள் முடங்கின. பல்வேறு தொழிலாளர்கள் வரு வாயின்றி உள்ளனர்.இந்தநிலை யில் அரசு, ஊரடங்கில் பல தளர்வு களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திங்கள் முதல் சென்னை உள்ளிட்ட கட்டுப்பாட் டிற்குள் இருக்கும் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் மண் டல அளவிலான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் அரசு மற்றும் தனி யார் பேருந்துகளை இயக்கு வதற்கு அனுமதி வழங்கப்பட்டி ருக்கிறது. இதற்கிடையே அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை அதிகாரிகள் குறைத்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஞாயி றன்று தமிழகம் முழுவதும் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் தூத்துக்குடி யிலும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

;