tamilnadu

img

திருநங்கைகளுக்கான  பசுமை வீடுகள் கட்டும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

 தூத்துக்குடி, செப்.1- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், மந்தித்தோப்பு ஊராட்சியில் திருநங்கைகளுக்கான தமி ழக முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பட்டா, அனுமதி ஆணையை வழங்கி னார்.  அப்போது அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேசுகை யில், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேலும் வளப்படுத்த இப்பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கம் அமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமன்றி அவர்களின் திறன்களுக்கு ஏற்ப, வங்கிகள் மூலம் கடனுதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் ரூ.65 லட்சத் தில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்காவை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

;