tamilnadu

img

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தொடர் போராட்டத்தினால் அருந்ததிய மக்களுக்கு பட்டாவுக்கான இடம் கிடைத்தது......

தூத்துக்குடி:
எட்டயபுரம் தாலுகா சுரைக்காய்பட்டி ஊராட்சி ரணசூர் நாயக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கின்ற அருந்ததிய மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரால் இலவச பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டாவிற்கான இடம் அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து அந்தமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அவர்களுக்கான இடம்  அளந்து கொடுக்கப்படாமல் இருந்தது. 

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தொடர் போராட்ட த்தை நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் என தொடர்ந்து நடத்தியதன் விளைவாக இருபத்தைந்து அருந்ததியர் மக்களுக்கு வெள்ளியன்று பட்டாவுக்கான இடத்தை அரசு நிர்வாகம் ஒப்படைத்தது. இதில் ரணசூர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தனர். அந்தப் பகுதிக்கு செங்கொடி கிராமம்என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் ராமர்,வீரபாண்டி, வைரவர் சாமி, லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர். இது விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

;