தூத்துக்குடி
தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 18 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 அமைச்சர்களும் அடங்கும்.
இந்நிலையில் தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு (புதன்) பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.