tamilnadu

திருமணத்தில் பங்கேற்ற  2 பெண்களுக்கு கொரோனா

தூத்துக்குடி,ஜூன் 30- தூத்துக்குடி புதுக் கோட்டை அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தில் திரு மணத்தில் பங்கேற்ற இரண்டு பெண்களுக்கு கொ ரோனா தொற்று ஏற்பட்டுள் ளது.மேலும் சிறுமிகள் உட்பட 30 பேருக்கு பரி சோதனை எடுக்கப்பட்டுள் ளது. தூத்துக்குடி புதுக் கோட்டை அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தில் திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற 2 பெண்களுக்கு கொரோனா உறுதி செய் யப்பட்டுள்ளது. இதனால் ராமச்சந்திரபுரத்தில் குமார கிரி ஊராட்சி தலைவர் ஜாக்சன் துரைமணி தலை மையில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வீடு வீடாக கிருமி நாசினி தெளித்தல் பொது மக்களுக்கு கபசுரகுடிநீா் வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.