tamilnadu

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது  போக்ஸோ வழக்கு

தூத்துக்குடி, மார்ச் 5- கயத்தாறு அருகே 12 வயது சிறுமி யிடம் சில்மிஷம் செய்த வாலிபர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சந்தனகுமார் (21), டீக்கடை நடத்தி வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி யிடம் சில்மிஷம் செய்தாராம். இது குறித்து சிறுமியின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆய்வாளர் பத்மாவதி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சந்தன குமாரை தேடி வருகிறார்.