தூத்துக்குடி, மே 24- தூத்துக்குடி, தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரைச் சேர்ந்தவர் விஜயபிரதாப் (37). இவரது மகன் அரிகரசுதன் (18). இரண்டு பேரும் ஒரு மோட்டார் பைக்கில் வேகமாக சென்றுள்ள னர். இதை அதே பகுதியினை சேர்ந்த தமிழரசன் மகன் ஜெயேந்திரன் (21) என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் 2 பேரும் சேர்ந்து ஜெயேந்திரனை கம்பால் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.