tamilnadu

மாதர் சங்கம், சிபிஎம் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஜூன் 25-ல் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூன் 22- நுண்நிதி நிறுவனங்களின் அடா வடி வசூலை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம்  மனுக் கொடுக்க சென்ற ஜனநாயக மாதர்  சங்க மாவட்டச் செயலாளர் பி.பூம யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புறநகர் செயலாளர் பா.ராஜா ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பு போலீஸ் அவதூறாக நடந்து கொண்டு தாக்கி உள்ளனர்.  இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி  மாவட்டக்குழு கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூன் 25 அன்று மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மா வட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சு னன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நுண்நிதி நிறுவனங்கள் சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கடன்  கொடுத்து மீளமுடியாத அதிகமான  தொகையை வசூலித்து வருகின்ற னர். இக்கடன் வலையில் சிக்கி ஏரா ளமான குடும்பங்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். இந்நி லையில் கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கொ டுத்த கடனுக்கான தவணையையும், வட்டியையும் நிர்ப்பந்தப்படுத்தி வசூ லிக்க கூடாது எனவும், அவ்வாறு செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இதனை மீறி அடாவடித்தனமான வசூலில் நுண்நிதி நிறுவனங்கள் ஈடுபட்டு வரு கின்றன.  

இவ்வாறு செயல்படும் நுண்நிதி  நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து  மனுக் கொடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பி.பூமயில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, ஜெயலட்சுமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர செயலாளர் பா.ராஜா ஆகி யோர் சென்றுள்ளனர்.   மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் இசக்கிராஜா, முத்துக்கு மார் ஆகியோரிடம் மனுவை கொடு த்துள்ளனர். அதனை வாங்கி படித்து விட்டு, நுண்நிதி நிறுவனங்கள் எங்கும்  கடன் கேட்டு அடாவடி செய்ய வில்லை என்று நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசினார்கள்.

எந்தெந்த நிறுவனங்கள் எங்கெங்கு அடாவடி வசூலில் செயல்படுகின்றன என்பது பற்றி மனுவில் குறிப்பிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர். இதனை கேட்காமல் மனுவை தூக்கி வீசி  எறிந்து எடுத்து கொண்டு செல்லுங் கள் என்று கூறியுள்ளனர்.  மனுவை கொடுக்கத்தான் வந்துள் ளோம் ஏன் வீசிகிறீர்கள் என்று பி.பூம யில் கேட்டுள்ளார். உடனே அருகி லுள்ள மாவட்ட ஆட்சியரின் பாது காப்பு போலீசாரை அழைத்து இவர்க ளையெல்லாம் வெளியேற்றுங்கள் என்று கூறியுள்ளார். அங்கு வந்த  காவலர் ரமேஷ்குமார், புறநகர செய லாளர் பா.ராஜாவின் கழுத்தை நெரித்து கையை முறுக்கி தாக்குதல் நடத்தியுள்ளார். செல்போனையும் பறிதத்துள்ளார்.

 இதனை தட்டிக்கேட்ட பி.பூமயில் மீதும் தாக்கியுள்ளார். மனுக் கொ டுக்க வந்தவரிடம் மனுக்களை வாங்கி உரிய அதிகாரியிடம் கொடுப் பதற்கு மாறாக நுண்நிதி நிறுவ னங்களுக்கு ஆதரவாக மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியா ளர்கள் இசக்கிராஜா, முத்துக்குமார் செயல்படுவதும், மனுவை தூக்கி வீசுவதும், அவமானப்படுத்துவதும், தாக்குதல் நடத்தியதற்கும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக் குடி மாவட்டக்குழு கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளது.  இச்சம்பவம் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை நேர டியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி.ஆறுமுகம், தா.ராஜா, ஆர்.பேச்சிமுத்து, மாவ ட்டக்குழு உறுப்பினர்கள் கே.பொன் ராஜ், பி.பூமயில், புவிராஜ், சங்கரன் ஆகியோர் சந்தித்து புகார் கொ டுத்தனர்.

  இச்சம்பவத்தை கண்டித்தும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்கள் இசக்கிராஜா, முத்துக்கு மார், மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பு  போலீஸ் ரமேஷ்குமார் ஆகியோர்  மீது நடவடிக்கை எடுக்கவும் வலி யுறுத்தி ஜூன் 25 (வியாழன்) அன்று மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் கட்சி ஊழியர்கள் பங்கேற்க வேண்டுகிறோம்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;