27 ஆயிரம் ஹெக்டேர் பயிர் நாசம்
குவாஹாத்தி, ஜூன் 2- தெற்கு அசாமில் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாயன்று ஏற்பட்ட நிலச்சரிவு களில் 20 பேர் பலியாயினர். பலர் காய மடைந்தனர். பலியானவர்களில் ஏழு பேர் கச்சார் மாவட்டத்தையும், ஏழு பேர் ஹைலகண்டி மாவட்டத்தையும், ஆறுபேர் கரிம்கஞ்ச் மாவட்டத்தையும் சேர்ந்தவர்களா வர். பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங் களுக்கு விரைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பராக் பள்ளத்தாக்கு பகுதியில் கடுமையான மழை பெய்துவரும் நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் வடகிழக்கு மாநி லங்களில் 3.72 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் வெள்ளத்தோடு போராடி வருகின்றனர். அசாமில் கோல்பாரா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள் ளது. நாகான் மற்றும் ஹோஜாய் மாவட்ட ங்களும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. வெள்ளத்திற்கு ஆறு பேர் பலியாகி யுள்ளனர். 348 கிராமங்கள் தண்ணீரில் மிதக் கின்றன. சுமார் 27,000 ஹெக்டேர் பயிர்கள் சேத மடைந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ஏ.எஸ்.டி.எம்.ஏ) தெரிவித்துள்ளது. நிலச்சரிவுகளைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவு படுத்தவும், உறவினர்களை இழந்த குடும் பங்களுக்கு முறை இழப்பீடு வழங்கவும் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோ வால் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தர விட்டுள்ளார்.