tamilnadu

வேலுடையார் கல்வி நிறுவனங்களின் விழா

மன்னார்குடி, பிப்.2-  திருவாரூரில் உள்ள வேலுடையார் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.எஸ். சிவவடிவேல் உடையாரின் 104 வது பிறந்த நாள் விழா வேலுடையார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழா வில் நிறுவனரின் படத்திற்கு கல்வி நிறு வனங்களின் தலைவர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கல்விப் பணியில் வெற்றி பெற அயராது உழைப்போம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் என திர ளாகக் கலந்து கொண்டனர்.