tamilnadu

img

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வரவேற்கத்தக்கது... ஜி.ராமகிருஷ்ணன்....

திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி யில் திங்கட்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு வரவேற்கத்தக்க செயல்களை செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் நிதியமைச்சராக இருக்கிற பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் உரிய முறையில் தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்தி குறைந்த பட்ச தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரவிருக்கிற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.மேலும் இந்த நோய்த்தொற்று காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழக மக்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யக்கூடிய புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது.  3 லட்சத்திற்கு மேல் அரசுபள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே  தமிழக அரசு புதிய கட்டிடங்களை உருவாக்கி ஆசிரியர்காலி பணியிடங்களை நிரப்பி கல்வித் தரத்தை மேம்படுத்துகிற அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;